கடவுளைப் படைத்தது யார்?

அறிமுகம்

நல்லது! இது ஒரு நல்ல கேள்விதான்! உன்மையாக சொல்ல வேண்டுமானால், அதற்குரிய பதில் எனக்கும் தெரியாது. இந்தக் கேள்வி என்னை வெகு காலமாகவே கொந்தரவு செய்துகொண்டிருந்தது. னால், இப்பொழுதெல்லாம் அந்தக் கேள்வி என்னை தொந்தரவுபடுத்துவதில்லை.

அப்படியானால் இதற்குரிய பதில் யாருக்குத் தெரியும்?

தற்சமயம் நம்மிடமுள்ள அனைத்துச் சான்றுகளையும், வேதாகமத்திலுள்ள ஆழமான சத்தியங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நான் உறுதியாகக் கூறுகின்றேன், இதற்குரிய இந்தக் கடினமான கேள்வியை கடவுள் தாமே தன்னகத்தே கொண்டுள் ளார் என்று தெளிவாகிறது. தேவன் தம்முடைய தோற்றத்தைப்பற்றிய வெளிப்பாட்டையும் அவர் எவ்வாறு உருவாக்கப்பட்டார் என்பன போன்றசான்றுகள் வேதாகமத்தில் காணப்படவில்லை. எந்தவொரு மனிதனும் தேவனை முகமுகமாய்ப் பார்த்ததில்லை. ஆதிகால மனிதர்கள் கடந்த காலத்தில் தேவன் பேசுவதைக் கேட்டிருக்கின்றனர். அவரது அற்புதமான மகிமை கடந்து செல்வதைப் பார்த்திருக்கின்றனர். ஆனால் எந்தவொரு மனிதனுக்கும் தேவனை அவருடைய பிறப்பை பற்றி வெளிப்படுத்தவில்லை.

மோசே தேவனோடு எதிர்ப்ட்டிருக்கிறார்?

வேதாகமத்தில் அச்சிடப்பட்டிருக்கும் ஒரு அரிய சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன. 3:1-6-ல் 1.“மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான். 2.அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே ன்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. 3.அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்து போகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான். 4.அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். 5.அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார். 6.பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.” 10.நீஇஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார். 13.”அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். 14.அதற்குத் தேவன்: “இருக்கிறவராகடீம் இருக்கிறேன்” என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.” எனவே, தேவனுக்குமட்டுமே அதற்குரிய பதில் தெரியும்.

நீதிமொழிகள் 8:17.”என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; ணதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.”

முக்கியமான விசயங்களைக்கூட, சில நேரங்களில் நாம் ஒருபுறமாய் ஒதுக்கிவைத்து விடுவதுண்டு. ஆனால் விளைவுகள் இருக்கும். நாம் விரும்புகிறோமோ இல்லையோ நமது படைப்பாளியை ஒருநாள் நண்பராகவோ, நீதிபதியாகவோ சந்திக்கத்தான்போகிறோம்.

கடவுளை எப்படி சந்திப்பது?

யோவான் 1:18.”தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.”

கடவுளைக் கண்டடைவதற்கு இயேசுவின் மூலமாகவே முடியும

1970-ம் ஆண்டில் ஒருநாள், தோ பாயோ நூலகம் அருகாமையிலுள்ள ஒரு நீருற்றின் ஒரத்தில் நான் அமர்ந்திருந்தபோது, என் மூலமாக ஏற்கனவே இயேசுவை அறிந்துகொண்ட உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர், அவருடைய வகுப்புத் தோழர் ஒருவரை என்னிடம் அமைத்துகொண்டு வந்தார். “இவர் என் வகுப்புத் தோழர், உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறார்” என்றார். அவரை என் பக்கத்தில் அமரவைத்துக்கொண்டேன். அந்த மாணவர் அவர் முகத்தை என் பக்கம் திருப்பினார். அதன் பின்னர் மிகவும் பெருமையாக, “கடவுளைப் படைத்தது யார்? என்றவொரு இக்கட்டான கேள்வியை கேட்டார். நான் திடுக்குற்றவனாய் சற்று நேரம் மெளனமாய் இருந்துவிட்டு, இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, இந்தக் கேள்விக்குரிய வெளிப்பாட்டை எனக்குத் தாரும்” என்று வேண்டிக்கொண்டேன். அதன்பின் நான் அந்த மாணவரைப் பார்த்து, “நீர் எனக்குப்புதியவர், அறிமுகமில்லாதவர். அப்படியிருக்க என் தகப்பனின் பெயரைக் கேட்டால், அதனை நான் கூற முடியுமா? என்று வினவினேன். அதற்கவர், ஆம், முடியாது என்று கூறினார்.” நீங்கள் என் சிநேகிதன் என்றால், இந்தக் கேள்விக்குரிய பதிலைக் கூறுவேனா? என்று கேட்டபோது, ஆம், கூறுவீர்கன் என்றார்.

அப்படியானால், நீங்கள் முதலில் அவரோடு அணுக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எனெனில், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று யோவான் 14:6ல் இவ்வாறு கூறியிருக்கிறார்.
அதன் பின்னர், நான் அந்த மாணவரிடம், “நீங்கன் உண்மையிலேயே இயேசு கிறிஸ்துவோடு தோழமை கொள்ள விரும்புகிறீர்களா?” என்று கேட்டபோது, அவர் ‘ஆம்’ என்றார். உடனே நானும் அவரிடம் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டேன். அவரும் இயேசு கிறிஸ்துவை தம் சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டார். “ஆண்டவரின் வாக்குத்தத்தின்படி பரலோகத்தில் உங்களுக்கு நித்திய வாழ்வு உண்டு” என்று கூறினேன். பரமன் இயேசு இப்பொழுது உங்களை சந்திக்க மிகவும் வலுள்ளவராக இருக்கிறார். பரலோகத்தில் ஆண்டவரை நீங்கள் ச்ந்திக்கும்போது, என்னிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடம் கேட்க மறக்கக்கூடது” என்று அந்த மாணவருக்கு நினைவுட்டினேன். அவரும் மெத்த மகிழ்ச்சியோடு “சரி, என்றார்.

சிநேகிதனே! இப்பொழுது உங்கள் நிலை என்ன?

நீங்கள் இந்த வினாவிற்குரிய விடையை தேட விரும்புகிறீர்களா? உங்களுடைய விடை ‘ஆம்’ என்றால், இயேசு கிறிஸ்துவை உங்களுடைய நல்ல சிநேகிதர் என்று நீங்கள் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் இயேசுவுக்கு ஒரு நல்ல சிநேகிதனாக இருந்தால் நீங்கள் நிச்சயமாக கடவுளுக்குக்கூட ஒரு நல்ல நண்பனாக திகழ முடியும்.

Leave a Reply

You must be logged in to post a comment.