எல்லா இனமக்களும் எவ்வாறு தோன்றினர்?

அறிமுகம்

எல்லா மனிதர்களுக்கும் ஒரேவிதமான உறுப்புகள் அவரவர்களது உடல்களில் செயல் படுவதைப்போலவே, வாழ்க்கையிலும் காற்று தண்ணீர் போன்ற அத்தியாவசியாமான பொருள்களும் அவர்களைச் சார்ந்திருக்கின்றன. அதன் விளைவாக வெவ்வேறு மொழிகள் பேசும் இமைக்களும் அவரவர்களுக்கென சொந்தமாகவே விருப்பத்திற் கேற்றவாறு கடவுள்களையும் உருவாக்கிக் கொண்டார்கள்.

மனித இனம் ஆதாம் ஏவாள் மூலமாகவே தோற்றம் கண்டது

மனித இனம் ஆதாம் ஏவாள் மூலமாகவே தோற்றம் கண்டது

மனித இனம் ஆதாம் ஏவாள் மூலமாகவே தோற்றம் கண்டது

(தியாகமம் அல்லது ஆதி.)
ஆதி. 3:20-ல்

“ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜ“வனுள்ளோருக் கெல்லாம் தாயானவள்.” இப்படிக கூறுகிறது.

மனிதர்கள் நிற, மொழி இன வேறுபாடின்றி தாம் ஏவாள் மூலமாகவே தோற்றம் கண்டார்கள். எல்லா மனிதரும் ஒரே விதமான உறுப்புகளையும் அம்சங்களையும் பெற்றிருந்தபோதிலும், ஒவ்வெருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். வெளிப்படையாக காட்சியளிக்கிற உற்பத்திப்பொருள்கள் பலவிதமான பொட்டலங்களாலும் வேறுபட்ட நிறங்களினாலும் தோற்றமளித்தபோதிலும் அந்தப் பொருள்களுக்கும் தயாரிப்பாளர் ஒருவராகவே இருப்பார். எல்லா மனிதர்களுங்கூட சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் காற்று தண்ணீர் போன்ற படைப்புகளையும் பகிர்ந்துகொள்வதைப் போல்வே, எல்லா இன மக்களுக்கும் ஒரேயொரு கடவுள் மட்டுமே எங்கும் வியாபித்திருக்கிறார்.

அப்படியாயின் எல்லா இனமும் மொழிகளும் எங்கிருந்து தோன்றின?

அப்படியாயின் எல்லா இனமும் மொழிகளும் எங்கிருந்�

அப்படியாயின் எல்லா இனமும் மொழிகளும் எங்கிருந்து தோன்றின?
ஆதி. 11:1-9 வரையுள்ள வஸனங்கள்,
1.“பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.
2.ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநேயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். 3.அப்
பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோ டொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக லக்கீலும் அவர்களுக்கு இருந்தது. 4.பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். 5.மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். 6.அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய னைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். 7.நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். 8.அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்னார்; அப் பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். 9.பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்னார்.” என்று கூறுகிறது. அதன் விளைவாகவே வேறுபட்ட மொழிகளும், கலாச்சாரங்களும் இனங்களும் தோன்றலாயின. அவர்களுடைய தோலின் நிறங்கள் மற்றும் பூகோள ரீதியில் மாறுபட்ட தன்மைகளை அடைந்ததாலும் நீண்ட காலமாகவே ஒரேயிடத்தில் தங்கியிருந்ததாலும் வெவ்வேறு விதமான உணவு வகைகளை உண்டு வாழ்ந்ததாலும் இப்படியொரு மாற்றத்தைக் கண்டார்கள். எப்படியிருந்தபோதிலும் ஒரேயொரு படைப்பாளிமட்டுமே, அவர்தான் மனித இனத்தைப் படைத்தவர். இந்த பூமியில் நமது வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக ஒரு புனித வேதாகமத்தை நமக்கு தந்தருளியிருக்கிறார். சங்கீதம் 119:105-ம் வசனத்தில், “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” இவ்வாறு கூறுகிறது. இயேசு கிறிஸ்து நமக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுப்பதற்காக எல்லா இன மக்களையும் ஒன்று திரட்டி ஒரு குடும்பமாக (தேவனுடைய பிள்ளைகளாக) ஒன்று சேர்ப்பதாகும். கொலோ. 3:11-ம்,“அதிலே கிரேக்கனென்றும் யூத னென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியாறென்றும் புறதேசத்தாறென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனறென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.” என்று கூறுகிறது. நீங்கள் ஒருவேளை கேட்கக் கூடும்,

கடவுள் ஏன் மனித இனத்தைப் படைத்தார்?

கடவுள் ஏன் மனித இனத்தைப் படைத்தார்?

கடவுள் ஏன் மனித இனத்தைப் படைத்தார்?

இரண்டு பிரதான நோக்கங்கள்:

1. நீண்ட கால நோக்கம்
கடவுள் எல்லா மனித நேயத்தையும் பரலோகத்தில் தம்மோடு இணைந்து வாழ்வதற்கும் எல்லாக் காலங்களிலும் மிகப்பெரிய, அன்பு செலுத்தக்கூடிய குடும்பமாகவும் திகழ்வதற்காக.

2. குறுகிய கால நோக்கம்
கடவுள் தந்தருளிய புனித வேதாகமத்தின் அடிப்படையில் பூமியில் தற்காலிகமாக வாழ்வதற்கும் சிந்தனைக்குரிய காரியங்களைக் கவனிப்பதற்கும் மற்றும் நித்திய வாழ்வுக்குரிய ஆவியைப் பெற்றுக்கொள்வதற்காக.

அன்பு செலுத்தவும் அவருக்குக் கீழ்ப்படியவும் நம்மை நாமே நேசிப்பதைப் போல அண்டை வீட்டாரையும் நேசிக்கவும் ஒருவரோடொருவர் சமாதானத்தோடு வாழவும் நமக்குக் கட்டளையிட்டார்.
கடவுள் நம்மை என்ன நோக்கத்திற்காக படைத்தாரோ அந்த நோக்கம் வெற்றி பெறவில்லை. மாறாக மனிதன் ஆண்டவருக்கெதிராகப் பாவஞ்செய்தான். ஆனால் நாமோ துயரம் நிறைந்த நிலையில் முழுமையாக கீழ்ப்படியத் தவறிவிட்டோம். ரோமர் 3:23-ம் வசனம்,“எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,” இப்படிக் கூறுகிறது. பரலோகம் பரிசுத்தமானதும் நீதியும் நேர்மையும் நிறைந்த ஒரு புனிதமான இடமாகும். அங்கு தீயசக்திகளுக்கு இடமில்லை. சூழ்நிலையைப் பொறுத்தவரை அவ்வளவு மனநிறைவு தருவதாக இல்லை. என்றாலும் நம்பிக்கை ஒளி வீசுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.